தற்காப்பு கலை நிகழ்ச்சியுடன் பழனிக்கு பாதையாத்திரை தொடங்கி பக்தர்கள்
பழனிக்கு பாதயாத்திரை
தைப்பூசத்தையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ஆர்.எஸ். பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி பாதயாத்திரைக்குழு சார்பில் 30ம் ஆண்டாக சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலிருந்து பால் குடங்கள் எடுத்தும், அலகு குத்தியும் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழனிக்கு பாதயாத்திரையை பக்தர்கள் தொடங்கினர்.
இதில், முன்னதாக அகத்தியர் தற்காப்பு கலைக்கூடத்தின் சார்பில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அகத்தியர், போகர் இரு முனிவர்களின் உருவப்படத்திற்கு தற்காப்புக்காக பயன்படுத்தும் பொருள்களை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
இதனை அடுத்து இந்நிகழ்ச்சியினை திருச்செங்கோடு தலைமை பயிற்சியாளர் வெங்கடேஷ் மற்றும் தற்காப்பு கலைக்கூடத்தின் தலைமை பயிற்சியாளர் சுரேஷ், சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் பராம்பரியமிக்க தற்காப்பு கலைகளான, சிலம்பம் ,பொய்கால் ஆட்டம் ,சக்கை கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு தற்காப்புகளையும் சிறுவர் சிறுமிகள் செய்து காண்பித்தது காண்போரை வியக்க வைத்தது.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை தொடங்கி புறப்பட்டுச் சென்றனர்.