இடிந்து விழுந்த நிழற்குடையால் பக்தர்கள் அவதி

இடிந்து விழுந்த நிழற்குடையால் பக்தர்கள் அவதி

நிழற்குடை இடிந்து விழுந்தது 

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் துர்காம்பிகா கோவில் அருகே உள்ள நிழற்கூடை இடிந்து விழுந்த நிலையில் அதனை சரிசெய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான ஸ்ரீ துர்காம்பிகா கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெரும் மழையால் இடிந்து விழுந்தது. இந்த பேருந்து நிலையம் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தற்பொழுது வெளுத்து வாங்கும் வெயிலால் நிழற்குடை இல்லாததால் அவதி அடைந்து வருகின்றனர்.

Tags

Next Story