மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் காலை முதல் பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் காலை முதல் பக்தர்கள் புனித நீராடல்

புனித நீராடும் பக்தர்கள் 

கடை முழுக்கை முன்னிட்டு இன்று காலை முதலே பக்தர்கள் மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் புனித நீராடி வருகின்றனர் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி 30ஆம் தேதியன்று கடைமுக தீர்த்தவாரி, மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் நடைபெறுவது வழக்கம் .இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்து புனித நீராடி செல்வது வழக்கம். கங்கை தனது பாவங்களை போக்குவதற்கு, மயிலாடுதுறை துலா கேட்ட காவிரியில் நீராடி புனிதம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. ஐப்பசி 1ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை தினம் தோறும் மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவதும், 30ஆம் தேதி கடைமுக தீர்த்தவாரி நடைபெறுவதும் வாடிக்கை. அந்த நிகழ்ச்சியில் சிவாலயங்களிலிருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரியின் இரண்டு கரைளிலும் எழுந்தருளுவார்கள். அதன் பிறகு தீர்த்தவாரி நடைபெறும். அந்த சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள். இன்று கடைமுக தீர்த்தவாரி என்பதால், காலையிலேயே பக்தர்கள் திரண்டு, காவிரியின் இரண்டு கரைகளிலும் குவிந்து, புனித நீராடி வருகின்றனர். மதியம் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Tags

Next Story