பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் காவடி எடுத்த பக்தர்கள்

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் காவடி எடுத்து சுமார் 8 கிலோ மீட்டர் பல்வேறு அலங்காரங்களுடன் கிராம பக்தர்கள் வந்தனர்.

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் காவடி எடுத்து சுமார் 8 கிலோ மீட்டர் பல்வேறு அலங்காரங்களுடன் வந்த கிராம பக்தர்கள்.. நூறாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் மாறுவேட ஊர்வலம். தேவராட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை கட்டைக்கால் ஆட்டம் அகோரிகள் அசுரர்கள் பெண்கள் வேடமிட்டு ஆடிப்பாடி சுமார் 8 கிலோ மீட்டர் கால் நடையாகவே நடந்து வந்த கிராம மக்கள்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பத்ரகாளிபுரம் கிராமம். இங்கு அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த கோவிலின் பெயரில் இந்த கிராமத்தின் பெயர் விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இங்கு கிராமத் திருவிழா ஒரு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவிழாவில் நிறைவு நாளான இன்று பக்தர்கள் அனைவரும் போடிநாயக்கனூர் இரட்டை வாய்க்கால் பிள்ளையார் கோவிலில் இருந்து காவடி சுமந்து பல்வேறு மாறுவேடமிட்டு சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் காலில் செருப்பு இன்றி பத்ரகாளிபுரம் கோயில் வரை ஆடிப்பாடி ஊர்வலமாக செல்வது சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் பாரம்பரியம் ஆகும்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உள்ளூர் கிராம மக்களே கரகாட்டக்காரர்கள் பெண்கள் வேடம் அணிந்தும் சாலையில் ஆடிப்பாடி ஊர்வலமாக வந்தனர். வெளியூர் வசிக்கும் கிராம மக்கள் இளைஞர்கள் கருப்பசாமி வேடம் முனிவர் அகோரிகள் பெண் வேடமிட்டும் அரக்கர்கள்போல் வேடமிட்டும் ஆடிப்பாடி ஊர்வலமாக வருவது பாரம்பரியமான முறையாகும்.

மேலும் பொய்க்கால் குதிரை ஆட்டம் கட்டைக்கால் ஆட்டம் கோலாட்டம் ஒயிலாட்டம் காவடியாட்டம் போன்ற பல்வேறு ஆட்டங்கள் ஆடி கால்நடையாகவே காலில் செருப்பு எதுவும் இன்றி சுமார் எட்டு கிலோமீட்டர் கோவில் வரை ஆடிப் பாடியபடி சென்று தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். சுமார் நூறாண்டுகளுக்கும் மேல் நடைபெறும் இந்த கலாச்சார நிகழ்வு அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story