நெத்திமேடு கரிய பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

X
பக்தர்கள் கூட்டம்
காணும் பொங்கலையொட்டி சேலம் நெத்திமேட்டில் உள்ள கரிய பெருமாள் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
காணும் பொங்கல் மற்றும் கரிநாளையொட்டி சேலம் நெத்திமேட்டில் உள்ள கரிய பெருமாள் கோவில் கரட்டில் ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாநகரில் உள்ள பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை முதலே பொது மக்கள் கரிய பெருமாள் கோவில் கரட்டில் ஏறத்தொடங்கினர். காலை, பிற்பகல், மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மலை மேல் உள்ள கரிய பெருமாள், முருகன், அய்யப்பன் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள், அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி அங்கு ஆங்காங்கே தின்்பண்டம், பலகார கடைகள் திடீரென அமைக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது. பாதுகாப்பு பணியில் அன்னதானப்பட்டி போலீசார் ஈடுபட்டனர்.
Next Story
