தொடர் விடுமுறை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம்
தொடர் விடுமுறை மற்றும் மார்கழி கார்த்திகை தினத்தை முன்னிட்டு தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
கார்த்திகை நாள் முருகனுக்கு உகந்த நாள் என்பதால் பல்வேறு முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருவது வழக்கம் இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் மார்கழி கார்த்திகை தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து வந்த ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொள்ள வந்தனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒவ்வொரு மாதம் வரும் கார்த்திகை அன்று தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து மக்களுக்கு அருள்பாளிப்பார். இந்த நிகழ்வினை முன்னிட்டும் பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் குவிந்தது வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் முருக பக்தர்களும் ஐயப்ப பக்தர்களும் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலப் பாதையில் சுற்றி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
Next Story