தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

  தேன்கனிக்கோட்டை அருகே நாகதேவதை கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

தேன்கனிக்கோட்டை அருகே நாகதேவதை கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒசபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ அஸ்வத்நாராயண நாகதேவதை கோவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நாகதேவதைக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிப்பட்டனர். தொடர்ந்து நூதன முறையில் பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்

Tags

Read MoreRead Less
Next Story