சிவகாசி பங்குனி பொங்கல் விழாவில் நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்...

சிவகாசி பங்குனி பொங்கல் விழாவில் நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்...

பக்தர்கள்

சிவகாசி அருகே திருத்தங்கல் அருள்மிகு மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா, பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் அருள்மிகு மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா, பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து நேர்த்திக்கடன். விருதுநகர் மாவட்டம். சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில்,இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, அருள்மிகு மாரியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான,அக்கினிசட்டி திருவிழா இன்று நடைபெற்று வருகிறது.இன்று காலை, திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து,சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன.சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.பங்குனி பொங்கல் திருவிழாவில்,நாளை 9ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை பால்குடம் செலுத்தும் நிகழ்ச்சியும்,இரவு முளைப்பாரி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.வரும்11ம் தேதி (வியாழன் கிழமை) பொங்கல் விழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள்,நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story