மாசி 1 முன்னிட்டு ஐயப்பன் மலைக்குச் சென்ற பக்தர்கள்!


ஐயப்ப பக்தர்கள்!

மாசி 1 முன்னிட்டு ராசிபுரத்தில் விரதம் இருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி ஐயப்பன் மலைக்குச் சென்ற பக்தர்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொடர்ந்து கார்த்திகை மாதம், மாசி மாதம் போன்ற மாதங்களில் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து சபரிமலை யாத்திரை பயணம் தொடர்ந்து சென்று வருகின்றனர். அதன்படி ராசிபுரம் ராஜகுரு ராமமூர்த்தி அவர்களின் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை 63 ஆம் ஆண்டாக செல்ல திட்டமிட்டு இன்று மாசி மாதம் 1.ம்தேதி விரதம் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் செய்து ஐயப்பன் முன்பாக விரதம் இருந்த பக்தர்கள் குருசாமி மணி, மற்றும் ராமலிங்கம் அவர்கள் தலைமையில் இருமுடி கட்டி, நெய் தேங்காய் உற்றி சரண கோஷங்கள் முழங்க இருமுடி கட்டிக் கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள், உறவினர்கள் என அனைவரும் கலந்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டு ஐயப்பன் பாடல்கள் பாடி பக்தி சரண கோசங்கள் எழுப்பி பூக்கள் தூவி பூஜை செய்தனர். மேலும் கன்னி ஐயப்ப சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்கள், உறவினர்கள் என அனைவரும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லக்கூடிய சுவாமிகளை வரிசையாக நிற்க வைத்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர். கோவிலுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் ஐயப்ப பக்தர்கள் வழங்கினர். ஐயப்ப சுவாமி பக்தர்கள் ராமலிங்கம், பாஸ்கர், மனோஜ், ரகுபதி, தமிழ்செல்வன், விக்னேஷ், ஹரிகரன், நிர்மல், விஷ்ணு, சுகேஷ், நந்த கிஷோர், உள்ளிட்ட பலர் பக்தி சரண கோசங்கள் சிறப்புப்பாக எழுப்பினர்.
Next Story



