கூண்டு மாட்டு வண்டியில் பழனிக்கு சென்ற பக்தர்கள்

கூண்டு மாட்டு வண்டியில் பழனிக்கு சென்ற பக்தர்கள்
X

அணிவகுத்து செல்லும் கூ வண்டிகள்

சங்ககிரி அருகே கூண்டு மாட்டு வண்டியில் பழனிக்கு பக்தர்கள் சென்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அரசிராமணி பகுதியில் இருந்து தைப்பூச விழாவையொட்டி பழனிக்கு கூண்டு மாட்டு வண்டியில் பயணம் செல்லும் பக்தர்களை சிறுவர்கள் சிறுமிகள் பார்த்து ரசித்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பகுதிகளில் இருந்து கடந்த சில தினங்களாக பல்வேறு குழுக்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர் இந்நிலையில் எடப்பாடி ஆலச்சம்பாளையம் அரசிராமணி மலங்காடு காட்டூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக நடந்தும் கூண்டு மாட்டு வண்டியில் முதியவர்களை ஏற்றிக் கொண்டும் கால்நடை தீவனங்களை மாட்டு வண்டியின் மேல் குடையின் கட்டி வைத்தாவாறு அணி வகுத்து வரிசையாக சென்றனர்.

இந்த நவீன காலத்திலும் கூண்டு மாட்டுவண்டியில் பக்தர்கள் பழனிக்கு தைப்பூச விழாவிற்கு சென்றது பொதுமக்களிடையே வியப்பயமா ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

Tags

Next Story