சீதளாதேவி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

ஆக்கூர் ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா உற்ச்சவத்தில் பக்தர்கள் பால் குடம், அலகு காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் மிகபழமை வாய்ந்த ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.

ஆக்கூர் ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா உற்ச்சவத்தில் பக்தர்கள் பால் குடம், அலகு காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்து பால் குடம் எடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளின் ச்வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். ஒரு பக்தர் 16 அடி நீளம் உள்ள அலகை வாயில் குத்தி வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Tags

Next Story