ராமர் சுனையில் வழிபாடு நடத்தி புனித நீர் அருந்திய பக்தர்கள்

ராமர் சுனையில் வழிபாடு நடத்தி புனித நீர் அருந்திய பக்தர்கள்
புனித நீர் அருந்திய பக்தர்கள்
ஆலங்குளம் அருகே ராமர் சுனையில் வழிபாடு நடத்தி புனித நீர் அருந்திய பக்தர்கள்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேஉள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.

Tags

Next Story