மதிய உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கும் முட்டை, மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி பார்வையிட்டு, மாணவிகளிடம் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பள்ளி தலைமையாசிரியர், ஆசியர்களிடம் மாணவிகளின் கற்றல் திறன், கற்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து, கடந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பாடவாரியாக மாணவிகளின் தேர்ச்சி குறித்து கேட்டறிந்து, 100% தேர்ச்சி பெற முறையாக மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள் பாடதிட்டத்திற்கு அப்பாற்பட்டு ஒழுக்கம் சார்ந்த கல்வியை வழங்க வேண்டும்.
இளம்வயது திருமணம், ஊட்டச்சத்து குறைபாடு, புதுமைபெண் திட்டம் பற்றியும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கண்ணன், பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், உதவி இயக்குநர் (நில அளவை) செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.