தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்


தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு பணிகளுக்கு கிராமப்புற இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கி காலி இடத்தை நிரப்ப வேண்டும், தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் முறையீடு முழக்க போராட்டத்தில் கோரிக்கை மனு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் தாராபுரம் கோட்ட அலுவலகத்தின் முன் முறையீட்டு ஆர்ப்பாட்டமும், கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சியும் தாராபுரம் கோட்ட தலைவர் வெங்கட் சாமி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கோட்ட துணைத் தலைவர்கள் தங்கவேல், செல்வகுமார் ஆகிய முன்னிலையில் நடைபெற்றது கோட்டச் செயலாளர் தில்லையப்பன் கோரிக்கை மனு பற்றி விளக்கம் அளித்து பேசினார், சங்கத்தின் இணைச் செயலாளர் ஆறுமுகம், சுமதி ,மேகலிங்கம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் நிறைவுறையாற்றிட, கோட்ட பொறியாளர் முருகசாமி நன்றியுரை ஆற்றினார்.

முறையீடு ஆர்ப்பாட்டத்தின் போது சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளுக்கு கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி நியமனம் வழங்கி காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும் சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டும் கோரிக்கை மனுவை கோட்ட பொறியாளர் இடம் வழங்கி அம்மனுவை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலை சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் கூடுதல் தலைமைச் செயலாளர் என அரசின் உயர் அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் நடைபெற்ற முறையீட்டு ஆர்ப்பாட்டத்தில் தாராபுரம் நெடுஞ்சாலை கோட்டத்தைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story