இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தாராபுரம் நகர மன்ற தலைவர் மனு

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தாராபுரம் நகர மன்ற தலைவர் மனு

ஆட்சியரிடம் மனு அளித்த நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன்

தாராபுரம் நகராட்சி பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 30 வார்டுகள் உள்ளது. இந்த 30 வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் அவ்வப்போது பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்ததற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தும், அதேபோன்று மாணவ மாணவிகள் 100% மேற்படிப்பை தொடர ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வடதாரை, காமராஜபுரம், சூளைமேடு, நேரு நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 60 ஆண்டு காலத்திற்கு மேலாக குடியிருந்து வரும் பொது மக்களுக்கு குடியிருக்கும் வீட்டிற்கு பட்டாக்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும் மேலும் நிலுவையில் உள்ள இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க கோரிக்கை மனுவை அளித்தார். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கோரிக்கை மனுவை ஏற்று உறுதியாக செய்து தருகிறேன் என மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story