டிரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பது குறித்து விழிப்புணர்வு
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் 9 பேர் கொண்ட குழு, ஸ்ரீராமலிங்கம் தலைமையில் தாராபுரம் ஒன்றியம் சத்திரம் கிராமத்தில் வேளாண்மை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டனர். காவேரி அக்ரோ சர்வீசஸ், சத்திரம், உதவியுடன் கோட்டமுத்தாம்பாளையம் கிராமத்தில் மாணவர்கள் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு மட்டுமின்றி, தண்ணீர் பாய்ச்ச மற்றும் விதைகளைப் பரப்ப என்று பல்வேறு காரணங்களுக்கு இப்போது ட்ரோன்கள் விவசாயத்தில் பயன்படுகின்றன. மேலும், இந்த ட்ரோன்களை கஸ்டமைஸ் (Customise) செய்து தண்ணீரின் அளவை கண்காணிப்பதற்கும் பயிரின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்கும் கூட பயன்படுத்த முடியும்.இன்றைய காலகட்டத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் நீக்குகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் கிராமத்து விவசாயிகள் பயனடைந்தனர்.