தர்மபுரி : பிளஸ்-1 தேர்வில் 30 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத் தேர்வில் 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் 108 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 174 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். பிளஸ்-1 தேர்வில் தர்மபுரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, செல்ல முடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இதே போல் 28 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இதன்படி மாவட்டத்தில் 30 பள்ளிகள் பிளஸ்-1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று உள்ளன.

Tags

Next Story