தர்மபுரி: ரூ.13.45 கோடியில் 92 புதிய கட்டிடங்கள் - முதல்வர் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 புதிய கட்டங்களை காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 155.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறை கட்டடங்கள், மாநிலத்தின் 21 மாவட்டங்களில் 20.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராம ஊராட்சி செயலக கட்டடங்கள். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 24.39 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 102 ஊராட்சி மன்றக் கட்டடங்கள் மற்றும் 15.46 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிகள் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் 51 புதிய அங்கன்வாடி மையங்களையும், ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் 9 புதிய ஊராட்சி மன்றக் கட்டடங்களையும், ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 8 புதிய உணவு தானிய கிடங்குகளையும், ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் 16 நியாய விலை கடைகளையும், ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தினையும், ஒரு நியாய விலை கடைகளையும்,ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் 7 புதிய வகுப்பறை கட்டடங்களையும் என மொத்தம் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 புதிய.கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மாதேமங்கலம் ஊராட்சியில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி ஏமகுட்டியூர் நியா விலை கடையினை இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு. பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் எஸ்.பவித்ரா, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், உதவி பொறியாளர் சுகுணா, மாதேமங்கலம்.ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.சங்கர், துணைத்தலைவர் மகாலட்சுமி, வார்டு உறுப்பினர் கஸ்தூரி உள்ளிட்ட,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.தர்மபுரி: ரூ.13.45 கோடியில் 92 புதிய கட்டிடங்கள் - முதல்வர் திறப்பு

Tags

Next Story