தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழாவை தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது, விழாவையொட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதா சிலை மற்றும் அவரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சியின் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன், சங்கர், கோவிந்தசாமி, கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நீலாபுரம் செல்வம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், விஸ்வநாதன், பசுபதி, தனபால், மகாலிங்கம், செல்வம், தன்ராஜ், அன்பு, நகர நிர்வாகிகள் அம்மாவடிவேல், சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன், பலராமன் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் நகராட்சி-ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.