தவக்காலத்தின் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலி வழிபாடு

175 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவேரியார் தேவாலயத்தில் திருப்பலி வழிபாடு.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுமார் 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது.

தற்போது உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு விரத முறைகளை கடைப்பிடித்து வரும் நிலையில் தவக்காலத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையான நேற்று மாலை சவேரியார் குளத்தில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள் மற்றும் அதனை தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது.

திருப்பலியை பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அவர்கள் நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சிகள் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story