தொப்புரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை ஆட்சியர் ஆய்வு

தொப்புரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

தொப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தருமபுரி பாராளுமன்ற தொகுதி, தருமபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட தொப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் இருந்து வாகனங்கள் மூலம் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்காளர் பட்டியல், படிவங்கள், அழியாமை போன்ற அனைத்து பொருட்கள் வந்துள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி இஆப., இன்று நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,சையது முகைதின் இப்ராகிம், வட்டாட்சியர் பார்வதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story