தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு முகாம்

தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு முகாம், கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்,

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில். தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் 147 தனியார் பள்ளிகளின் 1146 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தபடவுள்ளது.

தனியார் பள்ளி வாகனங்கள் சிறப்பு 2012 ன்படி என்னனெ்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது என்பதை கண்டறியும் சோதனை நடைபெற இருக்கிறது 1. அவசர கால வழி 2. தீயணைக்கும் கருவி 3. முதலுதவி பெட்டி 4. வேக கட்டுபாட்டு கருவி, 5. கேமரா 6.ரிவர்ஸ் சென்ஸ்சார் 7. தரைத்தள உறுதி தன்மை, பொது வாகன சோதனை உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்ற படுகின்றதா எனவும் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.

குறைபாடுகள் கண்டறியப்படும் வாகனங்கள் மீது தகுதிச்சான்று ரத்து செய்யபட்டு ஏழு நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு மீண்டும் சோதனைக்குட்டபட்டு, ஆய்வுக்கு வராத வாகனங்கள் பொதுவழிச்சாலையில் இயக்கு வது தெரிய வந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படு்ம் எனவும் வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகிாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story