தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தருமபுரி ஆட்சியர் சாந்தி

உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்ளை வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோத செயலில் ஈடுபடுத்தப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களுக்கு சமூக வலைதளம் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு, கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில், Digital Sales and Marketing Executive, Data Entry Operator ஆகிய வேலை தருவதாகவும், அதிக சம்பளம் தருவதாகவும், ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் Online Scamming போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இது போன்ற செயல்களை செய்ய மறுக்கும் போது துன்புறுத்தப்படுவதாகவும் சென்னை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆணையரின் கடிதத்தில்இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் ஒன்றிய அரசின் பதிவு பெற்ற முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விபரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறான விபரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் "அயலகத் தமிழர் நலத்துறை" அல்லது குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் குறித்த விபரம் www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். சென்னை குடி பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி 90421 49222, poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் பின்வரும் தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story