உழவர் சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்

இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் தர்மபுரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அத்தியாவசிய காய்கறிகள் வாங்க உழவர் சந்தையில் குவிந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தைகள் அமைந்துள்ளது. மேலும் தர்மபுரி நகரப் பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் எதிரே தர்மபுரி உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம் .இதனால் சமீப காலமாக பூண்டு, முள்ளங்கி, பெரிய வெங்காயம் உட்பட ஒரு சில காய்கறிகளின் விலை கணிசமான அளவு குறைந்து வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் காலை முதலே உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் தற்போது பல்வேறு கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஏராளமானோர் காய்கறிகள் வாங்க குவிந்ததால் உழவர் சந்தை எங்கும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story