தர்மபுரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 10ம் தேதி நடக்கிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் 2024-2025ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந் தாய்வு, வரும் 10ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்ப தாரர்கள் மின்னஞ்சல், குறுஞ் செய்தி மூலம் அழைக்கப்படுவார்கள். தரவரிசைப்படி அழைக்கப்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். வரும் 10ம்தேதி (திங்கட்கிழமை) அன்று நடை பெறும் கலந்தாய்வில் கணிதம், இயற்பியல். வேதியியல், தாவரவி யல் விலங்கியல் கணினி 10ம் தேதி நடக்கிறது அறிவியல், கணினி பயன் பாடு, புள்ளியியல், மின்னணுவியல் பாடப்பிரி வுகளுக்கு தரவரிசை 400 முதல் 320 வரை பெற்ற வர்கள் பங்கேற்கலாம்.

மறுநாள் 11ம் தேதி கலந்தாய்வில் வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல். வணிகவியல், வணிக நிர்வாகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிகவியல் கூட்டுறவு பாடப்பிரிவு களுக்காக தரவரிசை 400 முதல் 320 வரை பெற்ற வர்கள் பங்கேற்கலாம். 12ம்தேதி நடக்கும் தமிழ். ஆங்கிலம் பாடப்பிரிவுவில் விண்ணப்பித்த அனைத்து சிறப்பு தமிழ் மாணவர்கள், அடிப்படை தமிழ்-100 முதல் வரை தரவரிசை உள்ளவர்கள் பங்கேற்கலாம். அதேபோல் ஆங்கிலம் 100 முதல் 74 வரை உள்ள வர்கள் பங்கேற்கலாம் காட்சி வழித் தொடர்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப்பணி, உளவியல் - பாடப்பிரி வுகளுக்கான கலந்தாய் வில் 400 முதல் 320 வரை தரவரிசை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

இரண்டாவது சுற்றாக வரும் 13ம் தேதி கணிதம். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கி யல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு,புள்ளியியல், மின்னணுவி யல் பாடப்பிரிவுகளுக்கும் 14ம் தேதி வரலாறு அறிவியல், வணிகவியல் வணிக நிர்வாகவியல், வணிகவியல் கணினி பயன்பாடு, வணிகவி யல் கூட்டுறவு பாடப்பி ரிவுகளுக்கும், 15ம் தேதி தமிழ், ஆங்கிலம் பாடப் பிரிவுகளுக்கும், காட்சிவழித்தொடர்பியல், ஆடை வடிவமைப்பியல், சமூகப் பணி உளவியல் பாடப்பி ரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. சேர்க்கையின் போது மாணவர்கள் விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அசல் மாற்றுச்சான்றிதழ் 3. அசல் மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மாணவர் சேர்க்கை கட்டணத்துடன் வர வேண்டும். இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story