தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் வரத்து சரிவு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு 5 விவசாயிகள் மட்டுமே 217 கிலோ பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடியில், தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெண்பட்டுக் கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். பட்டுக் கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால், தர்மபுரி மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், பட்டுக் கூடுகளை தர்மபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் இன்று19ம் தேதி நடைபெறுவதையொட்டி விவசாயிகள் வருகை குறைந்து கொண்டே வந்தது. நேற்று மாலை வரை 5 விவசாயிகள் மட்டுமே 217 கிலோ பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். நேற்று வெண்பட்டுக்கூடு அதிகபட்சமாக கிலோ 501ரூபாய்க்கும், சரசாரியாக 449க்கும், குறைந்தபட்சமாக 279ரூபாய்க்கு ஏலம் போனது.மேலும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 993 ரூபாய்க்கு ஏலம் போனது.

Tags

Next Story