சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த கேஸ் மெக்கானிக்

விருப்பாச்சிபுரத்தை சேர்ந்த கேஸ் மெக்கானிக் சுந்தரமூர்த்தி தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளராக தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகாபுரி விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த கேஸ் மெக்கானிக் சுந்தரமூர்த்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை கண்டறிந்து உடனடியாக செய்து கொடுப்பேன் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் முருகன் கேபிள் ஆபரேட்டர், விஜயகுமார் ஜே சி ஐ மாவட்டத் தலைவர், டிங்கரிங் பாபு, பிரசாந்த் ஆடிட்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story