ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

ரயிலில் தவறி விழுந்து உயிரிழப்பு

ரயிலில் தவறி விழுந்து உயிரிழப்பு
அசாம் மாநிலம் சோனித்புர் மாவட்டம் ரங்கபாரா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் காரிஜா( 40 ). இவர் கடந்த 21 ம் தேதி கவுகாத்தியில் இருந்து கோயமுத்தூருக்கு ரயிலில் வேலைக்காக வந்துள்ளார். பொம்மிடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு சேலம் ரயில் இருப்பு பாதை காவல் நிலையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏழ்மையின் காரணமாக அவரது மகள் கங்கா டில்லியில் வீட்டு வேலை செய்து வருகிறார். அவரை விமானத்தில் வரவழைத்து இன்று மை தருமபுரி அமரர் சேவை மூலம் இறந்தவரின் புனித உடலை ரோட்டரி மின் தகன மேடையில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது அஸ்தியை பூஜை செய்து அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் இருப்பு பாதை முதல் நிலை காவலர் அருள் குமார், மை தருமபுரி சதீஸ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அருள்மணி ஆகியோர் நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 82 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்


