தர்மபுரி : மகளிர் உரிமைத்தொகை திட்டம் - 2.84 லட்சம் பெண்கள் பயன்
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 2.84 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதல் அமைச்சர் ஏழை, எளியோர், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதன்படி தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1,000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 15 லட்சம் குடும்பத்தலைவிகள் பயனடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2லட்சத்து 84 ஆயிரத்து 91 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர், என அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story