அரசு மருத்துவமனையில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் தர்மர் ஆய்வு

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் தர்மர் ஆய்வு மேற்கொண்டார்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் தர்மர் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் புதிதாக பதவியேற்றுள்ள மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் A தர்மர், MD, DCH., இன்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்களை ஆய்வு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் வருகை திடீர் ஆய்வு மருத்துவமனை கட்டமைப்பு பணிகள் ஆய்வு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆய்வு ஏழை, எளிய மக்களுக்கு உரிய நேரத்தில் தரமான சிகிச்சை வழங்க வேண்டும் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய தாய், சேய் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நோயாளிகளின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் மற்றும் இன்னுயிர் காக்கும் திட்டம் (IK-48) மூலம் உயரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் இலவச காதுகேட்கும் கருவிகளை நோயாளிகள் பெற்று பயன்பெற வேண்டும் மருத்துவமனையில் உள்ள உயிர் காக்கும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்து உயர்சிகிச்சை வழங்க வேண்டும் தரமான மருத்துவ சேவைகளை உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் மருத்துவர் A தர்மர் மருத்துவ அலுவலர் மதன்குமாருக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்க அறிவுரை வழங்கியுள்ளார். இதன் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags

Next Story