தனியார் நிதி நிறுவனம் முன்பு தர்ணா - 37 பேர் கைது

போச்சம்பள்ளியில் ஏபிஆர் பைனான்ஸ் நிதி நிறுவனம் முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட 37 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் APR பைனான்ஸ் நிதி நிறுவனம் குழுமத்தின் தலைவர் வனிதாவை கடந்த 30-11-23- அன்று கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்பட்ட வனிதா ஜாமினில் வெளியே வந்து 84 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பணம் கட்டி ஏமந்தவர்கள் இது வரை பணத்தை பற்றி எதுவும் கூறாமல் உள்ள வனிதாவிடம் பணத்தை பெற்று தர வேண்டும் என்று போச்சம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள ஸ்டேட் பங்கி அருகே உள்ள APR பைனான்ஸ் நிதி நிறுவனம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்டோர் 10 மணி முதல் 5 மணிநேரமாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த போச்சம்பள்ளி போலிசார் மற்றும் ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர் ஆனால் இவர்கள் சமாதானம் அடையவில்லை இதனால் போலீசார் தர்னாவில் ஈடுபடுத்தியதாக 37 பேரை கைது செய்து தனியர் திருமணமண்டபத்தில் வைத்து பின்னார் விடுவித்தனர். இதனால் போச்சம்பள்ளியில் பரபரப்பாக காணப்பட்டது. முன்னதாக தர்ணாவில் ஈடுபட்ட ஒரு பெண்மணி மயக்கம் அடைந்தார் அவரை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags

Next Story