வாணியம்பாடியில் சார் பதிவாளரை கண்டித்து தர்ணா போராட்டம்

வாணியம்பாடியில் சார் பதிவாளரை கண்டித்து தர்ணா போராட்டம்
தர்ணா போராட்டம்
வாணியம்பாடி சார் பதிவாளர் பத்திர பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியாக கூறி, சார்பாதிவாளர் அலுவலக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய அனைத்து ஆவணங்கள் வழங்கியும் சார் பதிவாளர் பத்திர பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியாக கூறி சார்பாதிவாளர் அலுவலக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட குடும்பத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியைவர் விவசாயி கண்ணன்.

இவருக்கு அதேபகுதியில் சொந்தமாக 1.75 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை தன்னுடைய மகன் ஞானவேல் மற்றும் இறந்த மகன் மாது என்பவரின் மகள்களான தீபிகா, கோபிகா, இந்துமதி, தனிஷ்கா ஆகியோருக்கு தானமாக பத்திரபதிவு செய்து கொடுக்க இன்று மதியம் 12 மணி அளவில் வாணியம்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்தினருடன் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வந்து அதிகாரிகளிடம் அளித்துள்ளார்,

பின்னர் பத்திர பதிவு செய்த டோக்கனும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து இரவு 9 மணி கடந்தும் அதிகாரி பத்திர பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், இதுகுறித்து சார்பதிவாளரிடம் கேட்டால் அவர் முறையாக பதிலளிக்காமல், மீண்டும் நாளை வர சொல்லியுள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் மற்றும் குடும்கத்தினர் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், பின்னர் சார் பதிவாளரிடம் கண்ணன் குடும்பத்தினர் கொடுத்த ஆவணங்கள் சரி பார்த்த பின்னர் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இரவு நேரத்தில் சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் பத்திர பதிவு செய்ய குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தால் சார்பதிவாளர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story