விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழில் சார் சமூக வல்லுநர்கள்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார புத்தாக்கத் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 184 பேர் தொழில் சார் சமூக வல்லுநர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த மதிப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில் மாதம் 20 நாள் வேலை வழங்கப்படும் ரூபாய் 5000 ஊதியமும் சேவை கட்டணமாக 250 ரூபாய் என மொத்தம் 5250 வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில்,

இவர்கள் உழவர் குழு, தொழில் குழு, சமுதாயப் பண்ணை பள்ளி ,திறன் பள்ளி ,ஆகியவை மூலம் ஊரகப்பகுதிகளில் தொழில் வளர்ச்சியை பெருக்குவது குறித்த பணிகளை செய்து வந்துள்ளனர் இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்டனர்.

தற்போது முறையாக ஊதியம் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் நடந்து கொள்வதாகவும் 5250 முறையாக வழங்காமல் பிடித்தம் செய்து மாதத்தில் 30 நாள்கள் பணிபுரியும் தங்களை மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தொழில்சார் சமூக வல்லுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,

அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது குறித்து அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேட்டி: வேல் பாண்டியம்மாள்

Tags

Read MoreRead Less
Next Story