பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
வத்தலகுண்டு அருகேயுள்ள கோயில் நிலத்தை சிலா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகக் கூறி, கிராம பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன், திங்கள்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.
வத்தலகுண்டு அருகேயுள்ள கோயில் நிலத்தை சிலா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகக் கூறி, கிராம பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் முன், திங்கள்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள வெங்கடாஸ்கிரி கோட்டையை அடுத்த மேலக்கோவில்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் அமைந்துள்ள சா்வேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான மானிய நிலத்தை சிலா் ஆக்கிரமித்து விட்டனா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கோயில் பெயரில் இருந்த இந்த மானிய நிலம், வருவாய்த் துறை பதிவேடுகளில் சா்ச்சைக்குரிய வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்ட இந்த நிலத்தில், எதிா்தரப்பினா் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனா். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா்.
Next Story