மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.
தமிழக முழுவதும் 9,613 கேங் மேன்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் கேங் மேன்கள் வரையறுக்கப்பட்ட பணிகள் இல்லாமல் தொடர்பு இல்லாத பணிகளை மின்வாரிய அதிகாரிகள் செய்யச் சொல்வது மின் உபயோகம் இல்லாத இடங்களில் மின்கம்பம் நடுதல், புதிய மின்கம்பம் உருவாக்குதல் குழி வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மட்டுமே செய்ய வேண்டியவர்களை மின்னோட்டம் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விபத்து ஏற்படுத்தி விட்டு அதிகாரிகள் தப்பித்துக் கொள்ளும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது வரைமுறை இல்லாமல் செய்யச் சொல்வது கூடுதல் பனிச்சுமைகளை கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் ஊழியராக பணியாற்றி வரும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட பணிகளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர் அதில் தமிழகத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட கேங்மேன்கள் மின்சார வாரியத்தால் உயிரெழுந்துள்ளனர் 100க்கும் மேற்பட்டவர்கள் கைகால் உள்ளிட்ட உடல் பாகங்களை இழந்துள்ளனர் - கூடுதல் பணி சுமையின் காரணமாக பணி செய்த போது இந்த விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அறிவிக்கப்படாமல் இவர்கள் பணி செய்வதாக தவறான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர் இதனால் கேங்மேன் குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர் மேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வரையறுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவித்தனர் இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கேங்மேன் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story