புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன்  தர்ணா போராட்டம்

குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு ட்பட்ட கைகுறிச்சி ஊராட்சி அழகம்பாள்புரம் பகுதிகள் வசித்து வரும் முத்துக்குமார் வீட்டு வரிக்கான ரசீது கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நான்கு வருடங்களாக கேட்டு அலைந்தும் இதனால் வரை வழங்கவில்லை என்றும் இது தொடர்பாக ஒன்றிய அலுவலகம்,

தாலுகா அலுவலகம், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்திலும் பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் தரையில் அமர்ந்து தருணா போராட்டம் ஈடுபட்டனர்.

இதனடியே செய்தியாளர்களிடம் முத்துக்குமார் கூறுகையில் வீட்டு ரசீது கேட்க ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்ற பொழுது ஊராட்சி மன்ற தலைவர் ரசீது வழங்குவதற்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் கேட்ட பணத்தை கொடுக்காததால் நான்காண்டுகள் தொடர்ந்து அலைக்கழித்து வருவதாகவும்,

இது தொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மேலும் ஊராட்சி மன்ற தலைவராக செல்வத்தின் மனைவி ரெங்கநாயகி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

ஆனால் அவருக்கு பதிலாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அவரது கணவர் செல்வம் அமர்ந்து கொண்டு பஞ்சாயத்து சம்பந்தமான அனைத்து விதமான அரசு பணிகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இன்றும் எனக்கு தீர்வு காணவில்லை என்றால் நாங்கள் நான்கு பேரும் சாகும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

இதனை எடுத்து அங்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சீனிவாசன் மற்றும் திருக்கோகர்ணம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இன்று உங்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்ததை எடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story