திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மேல்மலையனூர் அருகே திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கோவில்புரையூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹூதி, வாஸ்துசாந்தி, தத்துவார் சனை, நாடி சந்தானம், சிறப்பு யாக பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து மேள, தாளம் முழங்க யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், அனைத்து உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story