கொப்பம்பட்டி ஸ்ரீ ஆண்டியப்ப ஐயனார் திருக்கோவில் வைர தேரோட்டம்

கந்தர்வக்கோடை அருகே கொப்பம்பட்டி ஸ்ரீ ஆண்டியப்ப ஐயனார் திருக்கோவிலில் வைர தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொப்பம்பட்டி ஸ்ரீ ஆண்டியப்ப ஐயனார் திருக்கோவில் வைர தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இதில்1000 கும் மேற்பட்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொப்பம்பட்டி கிராமத்தில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.ஆண்டியப்ப ஐயனார் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான வைர தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் முன்னதாக ஆண்டியப்ப ஐயனார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு தேரில் வைத்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இத்தேரினை கொப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 1000 கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து கோவிலைச் சுற்றி தேரை இழுத்து சென்று வருகின்றனர். தேரோட்டத்திற்கு முன்னதாக பாரம்பரிய முறைப்படி குதிரை ,யானை, ஜல்லிக்கட்டு காளைகள் வரவழைக்கப்பட்டு செண்டை மேளம் முழங்க குதிரை யானை நடனமிட ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். கொப்பம்பட்டி ஸ்ரீ.அய்யனார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தினர் சார்பாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story