சிவகங்கையில் வைரவிழா ஆண்டு மாவட்ட மாநாடு - தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாவட்ட மாநாட்டில் பங்கேற்றவர்கள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தனியார் மஹாலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க வைரவிழா ஆண்டு மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், வருவாய்த்றை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தினை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு கூடுதல் பணியிடம் வழங்கிட வேண்டும். பெயர் திருத்த அரசாணை வெளியிட வேண்டும். அனைத்து நிலைகளிலும் பணியிறக்கம் செய்யப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணிபாதுகாப்பு அரசாணை வெளியிடவேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர் பட்டியலை விரைவில் வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு பட்டியல் மற்றும் பதவி உயர்வினை விரைவில் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.