அண்ணாமலை பற்றி தவறாக பேசவில்லை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

அண்ணாமலை பற்றி தவறாக பேசவில்லை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

  அண்ணாமலை பற்றி நான் தவறாக பேசவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். 

அண்ணாமலை பற்றி நான் தவறாக பேசவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த பின், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், நான் பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் தவறாகப் பேசவில்லை என்பது ஊடகங்களுக்குத் தெரியும்.

என்னையும் தான் தெர்மோகோல் விஞ்ஞானி என சமூக வலைத் தளங்கள் கூறின. அம்மா ஜெயலலிதா பற்றியும், அண்ணா பற்றியும் அண்ணாமலைதான் தவறாகப் பேசினார். மீனவர்கள் வோட்டுக்களைப் பெறவே கச்சதீவுப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது பாஜக 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சிப் புரிந்த பாஜக், இரு அவைகளைக் கூட்டி, கச்சத் தீவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காமல், மீனவர்களின் வோட்டு வங்கியை குறி வைத்தே, தற்போது தேர்தல் நேரத்தில் இதைப் பற்றி பேசி வருகிறது என்றார்.

Tags

Next Story