ஊத்தங்கரையில் டீசல் திருட்டு : மூன்று பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக பள்ளி பேருந்துகள் மற்றும் தனியார் நிறுவன பேருந்துகள் கனரக வாகனங்களில் இருந்து இரவு நேரங்களில் டீசல் திருடி வந்த கும்பலை கடந்த மூன்று மாத காலமாக ஊத்தங்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து CCTV காட்சிகள் மூலம் போலீசார் தேடி வந்த நிலையில் பெரியகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டு அவர்கள் பெரியகவுண்டனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தணிப்படை காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் வடிவேல், பிரபாகரன், மணிவேல், உள்ளிட்ட காவலர்கள் குற்றவாளிகளை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் பெரியகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பானிபூரி வியாபாரம் செய்து வரும் அருள்குமார்,
அதே பகுதியை சார்ந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் பூபதி, மற்றும் ஜெகநாதன், ஆகியோரை கைது செய்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த எட்டு கேன்களில் இருந்த சுமார் 400 லிட்டர் டீசல் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து செய்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல்துனை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்களிடம் கேட்டபோது வெங்கடதம்பட்டி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தனது தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்ததாகவும் அப்போது அவர்கள் பெரியார் கண்டனூர் பகுதி சார்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.


