பவித்திரம் பகுதியில் செயல்படும் டீசல் திருட்டு: இருவர் கைது

காவல் நிலையம்
டிவிஎஸ் நிறுவனத்தில் டீசல் மற்றும் டயரை களவாடிய இருவர் கைது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி, அய்யம்பாளையம் அருகே சுள்ளிமடை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் வயது 39.
இவர் கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் எல்லைக்கு உட்பட்ட பவித்திரம் பகுதியில் செயல்படும் வி ஆர் ஜி கிரஷர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, நத்தமேடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் குமரவேல் வயது 47 என்பவரும், கரூர் மாவட்டம்,
புகலூர் தாலுகா, தளவாய்பாளையம், கடைவீதி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முனுசாமி வயது 59 என்பவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி காலை 9 மணி அளவில், பவித்திரம் பகுதியில் செயல்படும் டிவிஎஸ் கம்பெனி நிறுவனத்தில் வைத்திருந்த 60 லிட்டர் டீசல் மற்றும் லாரி டயர் ஒன்றையும் களவாடி சென்று உள்ளனர் குமரவேல் மற்றும் முனுசாமி. இந்த சம்பவம் அறிந்த வி ஆர் ஜி கிரஷர் நிறுவனத்தின் மேலாளர் அருண்குமார்,
இது தொடர்பாக க.பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ரூபாய் 30,700- மதிப்பு கொண்ட டீசல் மற்றும் டயர் ஆகியவற்றை களவாடிய குமரவேல் மற்றும் முனுசாமி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.
