சதையை அறுத்து வினோத வழிபாடு
இராணிப்பேட்டை அடுத்த புளியங்கன்னு கிராம பகுதியில் மண்டி அம்மன் ஆலய திருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த மண்டி அம்மன் ஆலய திருவிழாவானது மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் இரண்டாவது நாளில் வேண்டுதல்கள் மற்றும் நேற்றிக் கடனை செலுத்த பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்றனர்.
சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்கள் பெண்கள் என தங்களது நெற்றி, கை, கால் ,நெஞ்சு, வயிறு ,போன்ற உடல் பகுதிகளிலிருந்து சதையை அறுத்து தங்களது வழிபாட்டினை பக்தியுடன் மேற்கொண்டனர். மேலும் இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வருகை தந்து தசைகளை அறுத்து தங்களது வேண்டுதல்கள் மற்றும் நேற்றிக் கடனை செலுத்தி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த மண்டி அம்மன் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காகவும், விநோத பிரார்த்தனையை பார்க்கவும் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்திருந்தனர்.