கிராமப்புற பெண்களின் பாரம்பரிய வினோத வழிபாடு

கிராமப்புற பெண்களின் பாரம்பரிய வினோத வழிபாடு
X

விநோத வழிபாடு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பௌர்ணமி இரவில் நிலா பிள்ளையாருக்கு கன்னிப்பெண் சிறுமி பூஜை செய்ய ஊர் பெண்கள் ஒன்று கூடி நிலா பிள்ளையார் பாடல் பாடி கும்மியடித்து வினோத வழிபாடு செய்தது நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் மயிலம்பட்டி பகுதியில் நிறைந்த பௌர்ணமி இரவில் கிராம பெண்கள் ஒன்று கூடி ஊர் கிணற்றில் தீர்த்தம் எடுத்து வந்து அம்மிக்கல்லை அலங்கரித்து சாணத்தில் பிள்ளையார் பிடித்து பம்பை மேளதாளங்கள் முழங்க பெண்கள் மாவிளக்கு தட்டு எடுத்துக்கொண்டு கிராம பகுதியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஊரின் நடுவே வைக்கப்பட்டிருந்த நிலா பிள்ளையாருக்கு கன்னிப்பெண் சிறுமிசிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவிளக்கு தட்டு எடுத்து வந்த பெண்கள் அனைவரும் வட்டமாக ஒன்று கூடி நிலா பிள்ளையார் பாடல்களைப்பாடி கும்மி அடித்து பழைமை மாறாமல் நிலா பிள்ளையாருக்கு வழிபாடு செய்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story