குமரி மாவட்டத்தில் நெல்லை சரக டி ஐ ஜி ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல்லை டி ஐஜி பிரவேஷ் குமார் நேற்று ஆய்வு செய்தார். நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாமிற்கு சென்று முதலில் ஆய்வு மேற்கொண்டார். ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மாவட்ட துப்பறியும் நாய் படை பிரிவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
மேலும் ஆயுதப்படையில் உள்ள காவலர் பயிற்சி கூடத்தையும் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து எஸ்.பி. அலுவலகம் வந்த டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, தனிப்பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்டு, பதிவேடுகளை ஆய்வு செய்தார். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் செயல்பாடுகள், செர்ச் லைட் செயல்பாடுகள் உள்ளவற்றையும் டிஐஜி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட எஸ். பி, சுந்தரவதனம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் எஸ் பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாமையும் ஆய்வு செய்தார்.