தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
ஆய்வு
குமாரபாளையத்தில் தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேர்தல் Itself குறித்த டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார். ஏப்.19 லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. வங்கி மேலாளர்கள், நிதி நிறுவன நிர்வாகிகள், நகைக்கடை அதிபர்கள், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் என பலதரப்பட்ட நபர்களுடன், போலீசார் பலகட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்தி, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினர். ஓட்டுச்சாவடி ஏற்பாடு பணிகள் நடந்து வரும் நிலையில், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைககள் குறித்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா, நேரில் பங்கேற்று, டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசாரிடம் கேட்டறிந்து, ஆலோசனை கூறினார்
Next Story