பாபநாசத்தில் புதிய அன்னுக்குடி வாய்க்கால் தூர்வாரும் பணி துவக்கம்

பாபநாசத்தில் புதிய அன்னுக்குடி வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கியது

பாபநாசத்தில் புதிய அன்னுக்குடி வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கியது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் புதிய அன்னுக்குடி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுதூரத்தையும் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர் . இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் இளங்கோவன் உதவி செயற்பொறியாளர் முத்துமணி மேற்பார்வையில் பாபநாசம் புதிய அன்னுக்குடி வாய்க்காலில் தூர்வாரும்பணி தொடங்கியது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லின் இயந்திரம் மூலம் வாய்க்காலில் உள்ள செடி கொடிகள் முட்புதர்கள் குப்பைகள் மற்றும் கழிவுகளை முழுமையாக எடுத்து அப்புறப்படுத்தி அகற்றினர் இப்பணி பாபநாசத்தில் இருந்து தொடங்கி திருப்பாலைத்துறை, உத்தாணி, அன்னுக்குடி வரை 4 கிலோ மீட்டர் அளவில் நடைபெற உள்ளது 400 ஏக்கர் பாசன வாய்க்கால் மூலம் பயன்படக்கூடிய இந்த புதிய அன்னுக்குடி வாய்க்கால் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விவசாயிகளும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர் .

Tags

Next Story