Digital Literacy பேருந்து சேவை: ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, Redington Foundation மற்றும் Learning Links Foundation சார்பில் அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்த Digital Literacy தொடர்பான பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில் : விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும், உயர்கல்வி, போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டவும், இளம் பசுமையாளர்களை உருவாக்கவும், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப்பணிகள் குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கவும், தொழிற்சாலைகள், விண்வெளி தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் 5 முதல் 9 -ஆம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு யிலும் மாணவர்களுக்கு, Digital Literacy தொடர்பாக (MS-Office, Basics of Computer, E-mail Creation ) தொடர்பாகவும், கல்லூரி மாணவர்கள் Cyber Crime, Cyber safety மற்றும் Artificial Intelligence தொடர்பாகவும், கிராமப்புற பொதுமக்கள் ; Aadhar card, Pan card, Digital Money Transfer தொடர்பாகவும், அறிந்து, தெரிந்து பயன்பெறும் வகையில் Digital Literacy தொடர்பான பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டு,Redington Foundation, Learning Links Foundation சார்பில் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அடிப்படையான கணினி தொழில்நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்கள் Digital Literacy பயிற்சி மூலமாக அறிந்து பயன்பெற முடியும். தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இணையவழி குற்றம் என்றால் என்ன? அதில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி? இணையவழி பாதுகாப்பு தொடர்பான படிப்புகள் குறித்தும், தொழில்நுட்ப கல்வியறிவு குறித்தும், இணையவழி குற்றங்களிலிருந்து மாணவர்கள் தங்களையும், தங்களுடைய தரவுகளையும் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளன. மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றல் கொண்ட ஒரு தொழில்நுட்பமாகும். AI தொழில்நுட்பம் Machine Learning என்னும் கணினி நிரலாக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும். இது எதிர்காலத்தில் பல்வேறு முன்னேற்றங்களை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல மேம்பட்ட Automation மற்றும் இயந்திரங்கள், தானாக முடிவெடுக்கும் திறன்கள் வளர்ச்சி பெறும்.
AI தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. எனவே,AI தொழில்நுட்பம் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்து, தெரிந்து பயன்பெறும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த Digital பேருந்தானது, மாவட்டம்; முழுவதும் 5 வருடத்திற்கு தொடர்ந்து இயக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட உள்ளது. 2024 -2025 ஆம் ஆண்டில் சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரத்திலும், 2025-2026 விருதுநகர் மற்றும் சாத்தூர் வட்டாரத்திலும், 2026-2027 திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம் வட்டாரத்திலும், 2027-2028 அருப்புக்கோட்டை, நரிக்குடி வட்டாரத்திலும், 2028-2029 காரியாபட்டி, திருச்சுழி வட்டாரத்திலும் Digital பேருந்து இயக்கப்பட்டு, Digital Literacy தொடர்பான சேவைகள் வழங்கப்பட உள்ளது.
எனவே, இந்த பயிற்சியை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன தெரிவித்தார்கள். இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, திரு.உதய பிரகாஷ் (Redington Foundation), திருமதி சுதா பிரியதர்ஷன் (Learning Links Foundation) மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.