11 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தீமிதி திருவிழா

குன்னம், கை.பெரம்பலூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா 11 ஆண்டுகளுக்குப் பிறகு கோலகாலமாக நடந்தது.

பெரம்பலூர் மாட்டம் குன்னம் வட்டம் கை.பெரம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா 11 ஆண்டுகளுக்குப் பிறகு மிக கோலகாலமாக நடைபெற்றது.

இதில் சுமார் 300க்கு மேற்பட்ட ஆண், பெண்,பக்கத்தர்கள் தீமிதித்தனர் கடந்த 14-05-24 அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று அதனை தொடர்ந்து 18 நாட்கள் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து. தொடர்ந்து பதினெட்டாம் நாளான நேற்று 31-05-2024 மாலை வட்டாகுளம் என்ற பகுதியில் இருந்து சத்தி அழைத்து வரப்பட்டு தீ மிதி நடைபெற்றது .இவ்விழாவில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டணர் இவ்விழாவை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர் குன்னம் போலிஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில்யிடுப்பட்டனர் சிறப்பாக திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா நடைபெற்றன

Tags

Next Story