வடபத்திரகாளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

தீமிதி விழா


இடங்கணசாலை அருகே மெய்யனுர் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி மெய்யனூர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த ( பிப் 1.ஆம் தேதி) பூச்சாட்டுடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன இதனை அடுத்து பக்தர்கள் இன்று புனித நீராடி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்கினி குண்டத்தில் முதலில் பூசாரி பூங்கரகத்துடன் தீ மிதித்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேத்து கடனை செலுத்தினார்.
Next Story



